Saturday, 29 December 2012

மரண தண்டனை என்பது....


நேற்று என் கனவில்:

ஒரு கருத்தரங்கில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
"மரண தண்டனை என்பது எப்படி இருக்க வேண்டும் ?"
என்பதே அதன் தலைப்பு:

குரூர குற்றங்களுக்கு கொடூர தண்டனைகள் தான் தீர்ப்பாக இருக்க வேண்டும் என்ற உப தலைப்பில் நான்.

அதில் சில கருத்துக்கள் உங்களுக்காக:






சில பல நிமிடங்களில் இறக்கும் தண்டனைகளைவிட பல மாதங்களுக்கு இறந்துக்கொண்டேயிருக்கும் தண்டனையின் வலி அதிகம் என்பதே என் ஆதி கருத்தாக இருந்தது.,

குற்றவாளிகள் .,"என்னடா பெரிய மரண தண்டனை ..! என்னக்காவது நாம சாகத்தானே போறோம்"..என்று அத்தண்டனைகள் அவர்களுக்கு தூண்டுதலாக இருக்கக்கூடாது என்பது என் முதல் கருத்து.,சரி அப்படி என்றால் அத்தண்டனை எப்படி இருக்க வேண்டும்.,

சற்றே!என் இன்ஸெப்ஷனிற்க்குள் வாருங்கள்:
உங்கள் குற்றம் குரூரமான செயல்..,அது மரண தண்டனை உறுதியாகிவிட்டது என வைத்துக்கொள்ளவும்..

இப்போது உங்கள் மனநிலை பாதி இயல்பு நிலை இழந்திருக்கும்.. இன்நிலை இத்திட்டத்தின் முதல் வெற்றிப்படி.

தண்டனை நாள்.., 


மனித நாகரிகம் தோன்றிய ஆற்றுப்படுகையின் கருவேலஞ்செடிகளின் முட்புதற்களுக்கு நடுவே ஒன்னரை அடி அகலமும் மூனரை அடி உயரமும் கொண்ட மரப்பெட்டியில் குற்றவாளியை நிர்வாணமாக மண்டியிட்டு அமர்த்தி .,(கை கால்கள் அசைக்க இயலாது)அப்பெட்டியை அதே அகலத்திற்க்கு குழிவெட்டி அத இறக்கி,மேலே அதே அகலத்திற்க்கு ஒரு மரப்பலகையினால் சுவாசிப்பதற்க்கு சிறு துளையிட்டு மூடிவிட வேண்டும்.

#இப்போது குற்றவாளி மனித இனத்திற்க்கு இன்றியமையாத்தாக அமையும் உணவு,உடை,உறையுள் மூன்றுமற்ற நிலையில்.

#குற்றவாளியின் மன ஓட்டம்
1.அவன் செய்த குற்றத்தை எண்ணியும்.

2.தன் குடும்பத்தை (இருந்தால்) எண்ணியும்,

3.தனக்கு இழைக்கப்பட்ட தண்டனையை எண்ணியும்,

4.தான் சீக்கிரம் இறந்துவிடவேண்டுமென்றும்., 

இன்னபிற நினைத்தும்
உலவிக்கொண்டிருக்கும்.,அவன் செய்த குற்ற அவனை சுற்றிக்கொண்டிருக்கும். சில நாட்களில் அவன் அவனை இழந்துவிடுவான்., பின் இறந்தும்விடுவான்."

என்று சொற்ப்பொழிவை முடித்து அனைவரும் கைத்தட்டும் தருவாயில் அலாரம் குறுக்கிட்டு என்னை எழுப்பத்தொடங்கியது.அலுவல் தொடர்ந்தது ;-)

(இதை படிக்கும் தருவாயில் உங்களால் (மன)வலியை உணரமுடிந்தால் நிச்சயம் இச்செயல் வெற்றிதான்)

#படித்தமைக்கு நன்றி

No comments:

Post a Comment